இந்த ஆண்டில் கணினிப் பகுதி வேறு வடிவத்தில் வருகிறது. சுட்டி
மயிலின் கணினிப் பகுதியைப் படிக்கும் போதே, அதற்கான கூடுதல் விளக்கங்கள்,
இணையத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கும். நீங்கள் இணையம் வழியாக அதிகமாகத் தெரிந்து கொள்ள முடியும். சுட்டி
மயிலில் வரும் கணினிக் கட்டுரைகளுக்கு ஏற்றவாறு பயிற்சிகளும் அங்கே இருக்கும்.
கொஞ்சம் கடினமாக இருக்கும். அவ்வளவுதான். படிப்படியாக
புரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் வரும். கவலைப்பட வேண்டாம். பொதுவாக,
எல்லோருடைய இல்லங்களிலும் கணினிகள் இருக்கும். பெரும்பாலான கணினிகளுக்கு இணையத்
தொடர்புகளும் இருக்கும். ஆகவேதான் அதிகமான தகவல்களைத் தருவதற்கு https://suttimayil.blogspot.com எனும் இணைய முகவரியில் ஓர்
வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறோம்.
சுட்டி மயில் சிறுவர்களுக்காகவே, அந்த இணையத் தளம்
உருவாக்கப்பட்டு இருக்கிறது. கணினிப் பகுதிக்கு என தனிப்பட்ட முறையில்
உருவாக்கப்படவில்லை. சுட்டி மயிலின் எல்லா பகுதிகளையும் படைப்புகளையும் பார்க்க
முடியும் படிக்க முடியும்.
அந்த இணையத் தளத்தில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ள
முடியும். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்ய முடியும். உங்களுடைய படங்கள், உங்களுடைய
ஆசிரியர்களின் படங்கள், உங்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் படங்கள், உங்கள்
பள்ளியின் தோற்றப் படங்கள் போன்றவற்றை அந்த வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவற்றை
மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வையுங்கள்.
எப்படி பதிவேற்றம் செய்வது என்பதை அடுத்த இதழில் விளக்குகிறேன்.
கவனமாக படித்துக் கொள்ளுங்கள். கணினியில் பெரிய புலமை பெற்று இருக்க வேண்டும்
என்கிற அவசியமே இல்லை. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள்கூட எளிதாகப் பயன்படுத்திக்
கொள்ள முடியும்; பங்கெடுத்துக் கொள்ள முடியும்.
கணினியின் நிறுவப்பட்டு இருக்கும் நிரலிகளில், மிக
எளிதானவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து கொள்வோம். அதற்கு முன்
என்.எச்.எம் எனும் தமிழ் நிரலியைப் பற்றி பார்ப்போம்.
தமிழ் நாட்டில் இருக்கும் நியூ ஹாரிசான் எனும் நிறுவனம், தமிழ் யூனிகோடு நிரலியை உலகத் தமிழர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ததும், அதைக் கணினிக்குள் நிறுவல் செய்து கொள்ளுங்கள். Install எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நிறுவல் என்பதே சரியான தமிழ்ச் சொல் ஆகும்.
நிறுவல் செய்யும் போது ஒரு கட்டத்தில் எந்த மொழி என்று கேட்கப்படும். அப்போது ’தமிழ்’ என்பதைத் தேர்வு செய்யுங்கள். தமிழ், அசாம், வங்காளம், குஜாராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய 11 இந்திய மொழிகளில், இந்த நிரலி வேலை செய்கிறது. ஆனால், நீங்கள் தமிழ் மொழியைத் தேர்வு செய்யுங்கள்.
என்.எச்.எம் நிரலியை நிறுவல் செய்ததும், ஆகக் கீழே இருக்கும் பணிப் பட்டையில் ஒரு வெள்ளை நிற மணியின் சின்னம் தோன்றும். Task Bar என்பதைத்தான் பணிப் பட்டை என்று அழைக்கிறோம். அவரசப் படாமல், அந்த வெள்ளை நிற மணியை வலது சொடுக்கு செய்யுங்கள். அங்கே Settings என்று ஒரு பகுதி இருக்கும். அதையும்
சொடுக்கு செய்யுங்கள்.
பொதுவாக, கணினிப் பயன்பாட்டில் சொடுக்கு என்றால் இடது
சொடுக்கு என்பதை மட்டுமே குறிக்கும். Right Click என்று இருந்தால் மட்டுமே வலது சொடுக்கு செய்யுங்கள். மற்றபடி
சொடுக்கு என்று இருந்தால் இடது சொடுக்குதான். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் Tamil Phonetic என்று இருப்பதைப் பார்க்க முடியும். அதை மட்டும் சொடுக்கி விட்டு மற்றவற்றை சும்மா விட்டு விடுங்கள். அதாவது Tamil 99, Old Typewriter, Bamini, Inscript ஆகிய மொழிப் பிரிவுகளுக்கு முன்னால் உள்ள (சரி) எனும் சின்னத்தை வேண்டாம் என்று எடுத்து விடுங்கள். அவற்ரின் இடங்கள் காலியாக
இருக்க வேண்டும். Tamil
Phonetic என்பதை மட்டும் தேர்வு செய்தால் போதும். அதை மட்டும் சொடுக்கு செய்யுங்கள். மற்ற எதையும் சொடுக்க
வேண்டாம்.
அடுத்து Start automatically when starting Windows என்பதையும் மறக்காமல் சொடுக்கி விடுங்கள். அதைச் சொடுக்க வேண்டிய அவசியம் வராது என்று
நினைக்கிறேன். ஏன் என்றால், பொதுவாக என்.எச்.எம். நிரலியை நிறுவும் போதே மேற்சொன்ன
தேர்வுப் பிரிவும் தானாகவே சொடுக்கப்பட்டு விடும். அவ்வளவுதான். Ok பொத்தானைத் தட்டி விட்டு வெளியேறுங்கள்.
அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா. கணினியின் இயக்கத்தை நிறுத்தி, மறுபடியும் தொடக்கம் செய்யுங்கள். அதாவது Restart செய்யுங்கள். அடுத்து Keyboard எனும் தட்டச்சுப் பலகையில் Alt எனும் பொத்தானை அழுத்திக் கொண்டே, 2 என்று இருக்கும் இலக்கப் பொத்தானையும் அழுத்துங்கள். இரண்டு பொத்தான்களையும் ஒரே
சமயத்தில் அழுத்த வேண்டும்.
வெள்ளி நிறத்தில் இருந்த மணியின் சின்னம் தங்க நிறத்திற்கு மாறும். அப்படி தங்க நிறத்திற்கு மாறிவிட்டது என்றால் தட்டச்சுப் பலகை தமிழ் மொழி செயல்பாட்டிற்கு மாறி விட்டது என்று பொருள்.
அதே Alt பொத்தானையும்
2 பொத்தானையும் மறுபடியும் அழுத்தினால், மணியின் சின்னம் வெள்ளி நிறத்திற்கு மாறும். அப்படி என்றால் ஆங்கில மொழி செயல்பாட்டிற்கு மாறிவிட்டது என்று பொருள். தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் மறுபடியும் Alt எனும் பொத்தானை அழுத்திக் கொண்டே 2 எனும் பொத்தானையும் சேர்த்து அழுத்துங்கள். தட்டச்சு தமிழுக்கு வந்துவிடும்.
இதுதான் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்யும் முறையாகும். தங்க நிறம் என்றால் தமிழ். வெள்ளி நிறம் என்றால் ஆங்கிலம். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து, ’ஸ்ரீ’ எனும் வட எழுத்தை எழுதுவதற்கு s r i என்று தட்டச்சு செய்ய வேண்டும். அதைப் போல ’ஷ்’ எனும் எழுத்தை எழுதுவதற்கு s h என்று தட்டச்சு செய்ய வேண்டும். ஒரு சில தடவை தட்டச்சு செய்து பாருங்கள். கொஞ்சம் பழக்கப்படுத்திக்
கொள்ளுங்கள். அப்போதுதான் எழுத்துகள் பிடிபடும். இந்த இந்த மாதிரி தட்டச்சு
செய்தால் இந்த இந்த எழுத்துகள் வரும் என்று புலப்படும்.
நிரலியை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது, அதன் அருகில் Manual எனும் ஒரு வழிகாட்டிக் கையேடு ஆங்கில மொழியில் இருக்கும். அதையும் படித்துப் பார்த்து விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் யூனிகோடு உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மறுபடியும் இணையப் பக்க முகவரியைச் சொல்கிறேன். http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் அந்த தமிழ் தட்டச்சு நிரலி இலவசமாகக் கிடைக்கிறது.
பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை வரலாம். அல்லது நிறுவல் செய்யும் போதும் பிரச்னைகள் வரலாம். பெரிய பிரச்னைகள் எதுவும் வரா. கணினிக்குப் புதியவர்களாக
இருந்தால் சிரமப்பபடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பயப்பட வேண்டாம். உதவிகள் செய்ய நாங்கள் தயாராக
இருக்கிறோம்.
பிரச்னை என்றால் 010-3913225 அல்லது 012-4347462 எனும் என்னுடைய கைத்தொலைப்பேசி எண்களுக்கு அழையுங்கள்.
தவிர, https://suttimayil.blogspot.com எனும் சுட்டி மயிலின் வலைதளத்திற்குச் சென்று Comments எனும்
பகுதியில் உங்கள் ஐயங்களைத் தட்டச்சு செய்து அனுப்புங்கள். தமிழ், ஆங்கிலம்,
மலேசிய மொழி என எந்த மொழியிலும் தட்டச்சு செய்யலாம். மீண்டும் உங்களைச் சுட்டி
மயிலின் வலைதளத்தில் சந்திக்கிறேன்.
ஆங்கில தமிழ்ச் சொற்கள்:
Install – நிறுவல்
Task Bar - பணிப் பட்டை
Click – சொடுக்கு
Right Click - வலது சொடுக்கு
Keyboard - தட்டச்சுப் பலகை
Restart – மறு தொடக்கம்
Settings – அமைப்புகள்
Function – செயலாற்றி
Manual – கையேடு
Comments - கருத்துரை
Comments testing 19.12.2012
ReplyDeleteksmuthukrishnan
Threaded comments works.
DeleteWorks fine. Children can send questions. Answers straight from this blog.
DeleteTesting again.
ReplyDeleteThird testing.
ReplyDeleteCons Test by admin.
ReplyDelete